பெண் ஆபரேட்டரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
பெண் ஆபரேட்டரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சுந்தரேசபுரம் புதுத்தெருவை சர்ந்தவர் சிலம்பரசி (வயது 35). உல்லியக்குடி ஊராட்சி சுந்தரேசபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். அதே ஊர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). சிலம்பரசி, நேற்று முன்தினம் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு செல்வகுமாரின் வீட்டின் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது செல்வக்குமாரின் மனைவி ரோஸ்மேரி தெருக் குழாயில் இருந்து மின் மோட்டார் வைத்து தனது வீட்டில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சிலம்பரசி, ஏன் குடிநீரை மரங்களுக்கு விட்டு வீணாக்குகிறீர்கள் என்று கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ரோஸ்மேரி, அவரது கணவர் செல்வகுமார் மற்றும் உறவினர் ராஜதுரை ஆகிய 3 பேரும் சேர்ந்து சிலம்பரசியை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் சிலம்பரசி அளித்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன், பெண் ஆபரேட்டரை தாக்கியதாக செல்வக்குமார், ராஜதுரை, ரோஸ்மேரி ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story