சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது
x
தினத்தந்தி 21 July 2021 9:15 PM GMT (Updated: 2021-07-22T02:45:10+05:30)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது செய்யப்பட்டான்

தாமரைக்குளம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்டபட்ட ஒரு கிராமத்தில் 5 வயது சிறுமிக்கு அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாக பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல நேற்று முன்தினம் இரவும் வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்த சிறுமிக்கு, அந்த சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனை அங்குள்ளவர்கள் பார்த்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியிடம் பற்றோர் கேட்டபோது முதலில் சொல்ல பயந்த சிறுமி பின்னர் நடந்ததை கூறியுள்ளது. இதுகுறித்து கீழப்பழூர் போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த சிறுவனை பிடித்து அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தார்.


Next Story