அ.தி.மு.க.வில் இருந்து நீக்க அதிகாரம் இல்லை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு விளக்கம் கேட்டு சேலம் நிர்வாகி நோட்டீசு


அ.தி.மு.க.வில் இருந்து நீக்க அதிகாரம் இல்லை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு விளக்கம் கேட்டு சேலம் நிர்வாகி நோட்டீசு
x
தினத்தந்தி 22 July 2021 3:02 AM IST (Updated: 22 July 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நீக்க அதிகாரம் இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு சேலம் மீனவர் அணி செயலாளர் சுரேஷ் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

சேலம்:
அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நீக்க அதிகாரம் இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு சேலம் மீனவர் அணி செயலாளர் சுரேஷ் நோட்டீசு அனுப்பி உள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கம்
சேலம் புறநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளராக எடப்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பதவி வகித்து வந்தார். இவர், 1991-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்துள்ளார். அவரது செல்போன் எண்ணில் சசிகலா தொடர்பு கொண்டு பேசினார்.
இதனால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சுரேசை கட்சியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டனர்.
விளக்கம் கேட்டு நோட்டீசு
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து தொண்டர்களை நீக்குவதற்கு கட்சியின் 35-வது விதி உட்பிரிவு 12-ன்படி பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே கட்சியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்றும், இதுதொடர்பாக விளக்கம் தர வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு மீனவர் அணி மாவட்ட செயலாளர் சுரேஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
15 நாட்களுக்குள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெறுவதாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு வெளியிடவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும் அந்த நோட்டீசில் அவர் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நீக்க அதிகாரம் இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு சேலம் நிர்வாகி நோட்டீசு அனுப்பியது கட்சி வட்டாரத்தில் பரபரப் ஏற்படுத்தி உள்ளது.


Next Story