பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 22 July 2021 3:06 AM IST (Updated: 22 July 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்

பெரம்பலூர்
 பக்ரீத் பண்டிகை தமிழகத்தில்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்ததால் முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள், திறந்த வெளி மைதானங்களில் சிறப்பு தொழுகை நடத்தாமல் தங்களது வீடுகளிலும், வீட்டின் மொட்டை மாடியிலும் சிறப்பு தொழுகை நடத்தி எளிமையாக கொண்டாடினர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வெகுவாக குறைந்ததால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதித்தது. அதன்படி பள்ளிவாசல்களும் திறக்கப்பட்டன. இதனால் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சில முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சில முஸ்லிம்கள் திறந்த வெளியிலும், தங்களது வீடுகளிலும், வீட்டின் மொட்டை மாடியிலும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

Next Story