ஜோலார்பேட்டை அருகே 3 அடி உயர முருகன் சிலை கண்டெடுப்பு


ஜோலார்பேட்டை அருகே 3 அடி உயர முருகன் சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 21 July 2021 10:56 PM GMT (Updated: 2021-07-22T04:42:36+05:30)

ஜோலார்பேட்டை அருகே 3 அடி உயர முருகன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில்கள் மிகவும் பழமையானதால் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு அந்தஇடத்தில் புதிதாக மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில், முருகன், சிவன் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் நேற்று முருகன் கோவில் கட்டப்படும் இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது 7 அடி ஆழத்தில் 3 அடி முருகன் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோவில் தர்மகர்த்தா சத்தியநாதன், பூசாரி மணி ஆகியோர் முருகன் சிலையை வெளியே எடுத்து கோவில் இடத்தில் வைத்தனர். இதை அறிந்ததும் பொது மக்கள் வந்து முருகன் சிலைக்கு கற்பூரம் ஏற்றி மாலை அணிவித்து வழிப்பட்டனர். 


Next Story