33 அடி உயர மின்கோபுரத்தில் ஏறி மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
33 அடி உயர மின்கோபுரத்தில் ஏறி மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த உள்ளகரம் கருணாநிதி நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 46). இவர், கிண்டி ராஜ்பவனில் உள்ள மின்சார வாரியத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர், சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டும் மனைவி தராததால் ஆத்திரம் அடைந்த கோதண்டராமன், கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சைக்கிளில் நங்கநல்லூர் சென்றார். பின்னர் அங்கு 100 அடி சாலையில் உள்ள சுமார் 33 அடி உயர மின்சார கோபுரத்தில் ஏறினார். சுமார் 30 அடி உயரத்தில் ஏறிய அவர், அங்குள்ள கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த பழவந்தாங்கல் போலீசார், மின்சார கோபுரத்தில் தூக்கில் தொங்கிய கோதண்டராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story