மாவட்ட செய்திகள்

கடம்பூர் அருகே விபத்தில் விவசாயி பலி + "||" + farmer killed in accident near kadambur

கடம்பூர் அருகே விபத்தில் விவசாயி பலி

கடம்பூர் அருகே விபத்தில் விவசாயி பலி
கடம்பூர் அருகே நிகழ்ந்த விபத்தில் விவசாயி பரிதாபமாக பலியானார்
கயத்தாறு:
கடம்பூர் அருகே அயிரவன்பட்டியை சேர்ந்த சண்முகம் மகன் முருகேசன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் விவசாய வேலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஊர் அருகில் வந்தபோது, எதிரே பர்வலிகோட்டைைய சேர்ந்த சுரேந்திரன் மகன் சரவணன் (வயது 27) வேகமாக ஓட்டி வந்த மினி லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகேசன் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து முருகேசன் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்துபோன முருகேசனுக்கு குருவம்மாள் என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.