புன்னக்காயலில் லாரியில் ஆற்றுமணல் கடத்திய டிரைவர் கைது


புன்னக்காயலில் லாரியில் ஆற்றுமணல் கடத்திய டிரைவர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 11:56 AM GMT (Updated: 2021-07-22T17:26:05+05:30)

புன்னக்காயலில் லாரியில் ஆற்றுமணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் புன்னக்காயல் பஸ் நிலையம் அருகில் ஆற்று மணலுடன் வந்த லாரியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். லாரி டிரைவர் சிவலப்பேரி வடக்குத்தெரு சேர்ந்த நடராஜன் மகன் சண்முகம் என்ற சரவணன் (வயது 25) என்பதும், 3 யூனிட் ஆற்று மணலை திருடி கடத்தி வந்ததும் தெரிய வந்தது. ஆற்றுமணலுடன் லாரியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் மகாராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Next Story