குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிறுத்தம்: அனுமதியின்றி பள்ளம் தோண்டியதால் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை


குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிறுத்தம்: அனுமதியின்றி பள்ளம் தோண்டியதால் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 22 July 2021 1:45 PM GMT (Updated: 2021-07-22T19:15:15+05:30)

கொள்ளிடம் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிறுத்தம் அனுமதியின்றி பள்ளம் தோண்டியதால் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்தனர்.

கொள்ளிடம், 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சியை சேர்ந்த மாங்கனாம்பட்டு பகுதியில் இருந்து மயிலகோவில் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக குழாய் பதிக்கும் பணி ஊராட்சி சார்பில் நடந்தது. இதற்காக கொள்ளிடம் - ஆச்சாள்புரம் நெடுஞ்சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டும் பணி பொக்லின் எந்திரம் மூலம் நடந்தது. இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத் தலைவர் சிவபிரகாசம் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டனர். இதை அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று உரிய அனுமதி இன்றி பள்ளம் தோண்டப்படுவதாக கூறி குழாய் பதிக்கும் பணியை நிறுத்தினர். மேலும் ஏற்கனவே தோண்டிய பள்ளத்தை மூடவும் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டது. உரிய அனுமதி பெறப்பட்ட பின்னரே சாலையோரத்தில் பள்ளம் தோண்ட முடியும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story