புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் குடிநீர் குழாய் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்


புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் குடிநீர் குழாய் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்
x
தினத்தந்தி 22 July 2021 3:45 PM GMT (Updated: 22 July 2021 3:45 PM GMT)

தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

சாலியமங்கலம்,

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் குடிநீர் குழாய் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இங்கு பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துதல், உயிர் கோழி விடுதல், பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்தி கடன்களை நிறைவேற்றுகிறார்கள். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய பின் குளிக்க முடி காணிக்கை செலுத்துமிடத்துக்கு அருகே உள்ள குடிநீர் குழாயில் குளித்து வருகின்றனர். மேலும் இந்த குடிநீர் குழாயை கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும், தஞ்சை - நாகை சாலையில் பயணிப்போரும் தண்ணீர் குடிக்க பயன்படுத்தி வருகிறார்கள்.

மக்கள் பயன்பாட்டில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த குடிநீர் குழாய் பகுதி தாழ்வான பகுதியாக உள்ளதால் இங்கு மழைநீர் மற்றும் குடிநீர் குழாய் உபரிநீர் தேங்கி கழிவு நீராக தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே பக்தர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவு நீரை வெளியேற்றி இந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க தகுந்த சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story