தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தேனி அல்லிநகரத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அல்லிநகரம்:
தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மணிரத்தினம். அவருடைய மனைவி ஜெயசுதா (வயது 29). கடந்த சில மாதங்களாக இவர், வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த ஜெயசுதா, வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிரத்தினம் கொடுத்த புகாரின் பேரில், அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story