சங்கராபுரம் அருகே மருமகனை தாக்கிய மாமனார் கைது

சங்கராபுரம் அருகே மருமகனை தாக்கிய மாமனார் கைது
சங்கராபுரம் அருகே மருமகனை தாக்கிய மாமனார் கைது
Published on

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ் (வயது 44) விவசாய கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மகன் லெனினை(17) திட்டியதால் கோபித்துக்கொண்டு அதே ஊரில் உள்ள தனது பாட்டி பெரியநாயகம் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மகனை அழைத்து வர சென்ற ஜோசப்ராஜை அவரது மாமானார் பெஞ்சமின் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

இதில் ஆத்திரம் அடைந்த பெஞ்சமின் ஜோசப்ராஜை ஆபாசமாக திட்டி தடியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து பெஞ்சமினை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com