சின்னசேலத்தில் பெண் வக்கீலை தாக்கிய கணவர் மாமனார் கைது


சின்னசேலத்தில் பெண் வக்கீலை தாக்கிய கணவர் மாமனார் கைது
x
தினத்தந்தி 22 July 2021 10:55 PM IST (Updated: 22 July 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் பெண் வக்கீலை தாக்கிய கணவர் மாமனார் கைது

சின்னசேலம்

சின்னசேலம் பாண்டியன்குப்பம் ரோடு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகள் சந்தியா(வயது 24). வக்கீலான இவருக்கும் சின்னசேலத்தை அடுத்த வானவக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ரஞ்சித்குமார்(29) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. யஸ்மின் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. 

இந்தநிலையில் சந்தியாவை வக்கீல் வேலைக்கு போகக்கூடாது என ரஞ்சித்குமார் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே நடந்த பிரச்சினையில் சந்தியாவை அவரது கணவர் ரஞ்சித்குமார், இவரது தம்பி இளையராஜா, மாமனார் சீனிவாசன்(54), மறவாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மனைவி தமிழரசி ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது.  இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவுசெய்து ரஞ்சித்குமார் (29) சீனிவாசன் (54) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story