ரிஷிவந்தியம் அருகே கல்வீசி பஸ் கண்ணாடி உடைப்பு
ரிஷிவந்தியம் அருகே கல்வீசி பஸ் கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ரிஷிவந்தியம்
சென்னையிலிருந்து நேற்று மதியம் சங்கராபுரம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. ரிஷிவந்தியம் அருகே அத்தியூரில் வந்தபோது திடீரென மர்ம நபர்கள் பஸ்மீது கல்வீசினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. இதையடுத்து டிரைவர் வேலு பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு பஸ்சின் பின்பக்கம் வந்து பார்த்தார். அங்கு யாரையும் காணவில்லை.
இதுபற்றிய தகவல் அறிந்து அரசு போக்குவரத்து கழக டிரைவிங் இன்ஸ்பெக்டர் பூமாலை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். நடந்த சம்பவம் குறித்து பஸ் கண்டக்டர் முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்கு பதிவுசெய்து பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓடும் பஸ்மீது மர்மநபர்கள் கல்வீசி கண்ணாடியை உடைத்த சம்பவம் அத்தியூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
Related Tags :
Next Story