மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை விளைநிலங்கள் வழியாக தூக்கிச்சென்ற அவலம்

மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை விளைநிலங்கள் வழியாக தூக்கிச்சென்ற அவலம்
x
தினத்தந்தி 22 July 2021 5:35 PM GMT (Updated: 2021-07-22T23:05:55+05:30)

மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை விளைநிலங்கள் வழியாக தூக்கிச்சென்ற அவலம்

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நன்னாவரம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் பாடை கட்டி மயானத்துக்கு ஊர்வலமாக தூக்கிச்சென்றனர்.  ஆனால் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாயனத்துக்கு போதிய பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை விளைநிலங்கள் வழியாக மிகவும் சிரமப்பட்டு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இதற்கிடையே நன்னாவரம் கிராமத்தில் மயானத்துக்கு செல்ல உடனடியாக பாதை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story