நெருப்பு மூட்டி குளிர்காய்ந்த வியாபாரிகள்


நெருப்பு மூட்டி குளிர்காய்ந்த வியாபாரிகள்
x
தினத்தந்தி 22 July 2021 5:58 PM GMT (Updated: 2021-07-22T23:29:30+05:30)

நெருப்பு மூட்டி குளிர்காய்ந்த வியாபாரிகள்.

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடும் குளிர் நிலவியது. இதனால் கோத்தகிரி மார்க்கெட் பகுதி பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு வியாபாரிகள் தங்களது கடைக்குள் விறகுகளை கொண்டு தீ மூட்டி குளிர் காய்ந்தவாரே காய்கறிகளை தரம் பிரிக்கும் பணிகளை மேற்கொண்டனர். 

மேலும் கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி, வ.உ.சி நகர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள தோட்டங்களில் மழைநீர் தேங்கியதால், அறுவடைக்கு தயாராக இருந்த உருளைக்கிழங்குகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Next Story