சாலையோர பள்ளத்தில் சிக்கிய டேங்கர் லாரி


சாலையோர பள்ளத்தில் சிக்கிய டேங்கர் லாரி
x
தினத்தந்தி 22 July 2021 11:31 PM IST (Updated: 22 July 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

சாலையோர பள்ளத்தில் சிக்கிய டேங்கர் லாரி.

பந்தலூர்,

கூடலூரில் இருந்து கொளப்பள்ளி வழியாக புஞ்சைக்கொல்லிக்கு மண்எண்ணெய் டேங்கர் லாரி சென்று கொண்டு இருந்தது. கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-2) காவயல் பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் லாரியின் சக்கரம் சிக்கியது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பச்சை தேயிலை ஏற்றி வந்த லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது.

இதையடுத்து பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து டேங்கர் லாரியை மீட்கும் பணி நடந்தது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த லாரி மீட்கப்பட்டது. அதன்பின்னரே அந்த வழியாக போக்குவரத்து சீரானது.

Next Story