மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் தனியாக வெளியே வரக்கூடாது + "||" + The public should not come out alone

பொதுமக்கள் தனியாக வெளியே வரக்கூடாது

பொதுமக்கள் தனியாக வெளியே வரக்கூடாது
பொதுமக்கள் தனியாக வெளியே வரக்கூடாது.
கூடலூர்,

கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி ங்கணக்கொல்லி கிராமத்தை சேர்ந்தவர் குஞ்சு கிருஷ்ணன்(வயது 52). விவசாயி. இவரை கடந்த 19-ந் தேதி புலி அடித்து கொன்றது.  இதையொட்டி ங்கணகொல்லி கிராம பகுதியில் உள்ள புதர்களை வனத்துறையினர் வெட்டி அகற்றினர். தொடர்ந்து அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். 
அப்போது மீண்டும் புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். 

இதனால்  கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து மாலை முதல் அதிகாலை வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு தனியாக வெளியே வரக்கூடாது என்று முதுமலை ஊராட்சி பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் கூட்டமாக நடந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.