காதலன் வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு சென்ற பெண்-அக்காள்கள் மீது தாக்குதல்


காதலன் வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு சென்ற பெண்-அக்காள்கள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 22 July 2021 6:05 PM GMT (Updated: 2021-07-22T23:35:05+05:30)

வேப்பனப்பள்ளி அருகே காதலன் வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு சென்ற பெண்-அக்காள்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.என். போடூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராணி (வயது 18). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த நாகபூசணம் (25) என்பவரும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது யுவராணி மற்றும் அவரது 3 அக்காள்களும் நாகபூசணம் வீட்டிற்கு மாப்பிள்ளை கேட்டு சென்றுள்ளனர். அப்போது நாகபூசணத்தின் தந்தை கிருஷ்ணப்பா (45) மற்றும் அங்கிருந்த வெங்கடேஷ் (33) ஆகிய இருவரும் யுவராணி மற்றும் அவருடன் சென்ற 3 பேரையும் தாக்கியுள்ளனர். பின்னர் யுவராணி மற்றும் அவரது அக்காக்கள் 3 பேரும் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர். அதில் வெங்கடேசன் என்பவர் கை முறிக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பதில் தாக்குதலில் ஈடுபட்ட யுவராணி மற்றும் அவரது அக்காக்கள் 4 பேரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் வெங்கடேசன் அளித்த புகாரின் பெயரில் யுவராணி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்ப்பட்டடுள்ளது. அதேபோல் யுவராணி அளித்த புகாரின் பெயரில் கிருஷ்ணப்பா மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இருதரப்பினரும் மோதிக் கொண்ட வழக்கில் 7 பெண்கள் உள்பட 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பெண் மாப்பிள்ளை கேட்டு சென்று தகராறு செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story