சந்தன மரத்தை வெட்டிய மர்ம ஆசாமிகள்
சந்தன மரத்தை வெட்டிய மர்ம ஆசாமிகள்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே அத்திசால் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் சந்தன மரத்தை மர்ம் ஆசாமிகள் வெட்டினர். ஆனால் நேற்று அதிகாலை வரை வெட்டும் பணி நடந்ததால், ஆட்கள் நடமாட்டம் தொடங்கியதும் பாதியிலேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர்.
அதன்பிறகு அந்த வழியாக வந்த பொதுமக்கள் சந்தன மரம் வெட்டப்பட்டு கிடப்பதை கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், பந்தலூர் தாசில்தார் குப்புராஜ், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் சேரம்பாடி வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர் சசிகுமார் மற்றும் வனத்துறையினர் வந்து, பாதியில் விட்ட மரத்தை முழுமையாக வெட்டினர். தொடர்ந்து வெட்டப்பட்ட மரத்துண்டுகள் சரக்கு வாகனத்தில் ஏற்றி வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story