தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
ராமேசுவரம்
வங்கக்கடலில் புதிதாக புயல் சின்னம் ஒன்று உருவாகுவதற்கான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகின்றது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலை முழுவதும் மணல் புழுதியாக பறந்து செல்கின்றது.
இதேபோல் தனுஷ்கோடி பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.
எம்.ஆர். சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக சீறி எழுந்து வருகின்றன.
அதுபோல் அரிச்சல் முனை பகுதியில் தடுப்புச்சுவர்கள் மீது மோதி கடல் அலை நீரானது சாலை வரையிலும் வந்து செல்கின்றன. பலத்த சூறாவளி காற்றால் தனுஷ்கோடி சாலை முழுவதும் மணல் புழுதியாக பறந்து செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பாம்பன் பகுதியிலும் பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றம் ஆகவே காணப்பட்டு வருகின்றது.
Related Tags :
Next Story