உண்டியல் எண்ணிக்கை
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
திருப்புவனம்
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தென்மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்றதாகும். இக்கோவிலின் உண்டியல் திறப்பு நேற்று பரமக்குடி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மடப்புரம் கோவில் உதவி ஆணையர் செல்வி, அறங்காவலர் குழுத் தலைவர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியலில் 194 கிராம் தங்கம், 256 கிராம் வெள்ளி, ரொக்கம் 27 லட்சத்து 5 ஆயிரத்து 726 இருந்தது. இதில் அறங்காவலர்கள் தீபாஅமிர்தம், பாஸ்கரன், கமலா, சண்முகவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். உண்டியல் எண்ணும் பணிக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story