வெம்பாக்கம் அருகே; 2 வீடுகளில் 17 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
வெம்பாக்கம் அருகே 2 வீடுகளில் 17 பவுன் நகை, ரூ.1 லட்சத்ைத மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தூசி
வெம்பாக்கம் அருகே 2 வீடுகளில் 17 பவுன் நகை, ரூ.1 லட்சத்ைத மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
விவசாயி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அரசாணைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 41), விவசாயி. இவருடைய மனைவி திலகவதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கோபி நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று காலையில் வீட்டை பூட்டிக்கொண்டு கோபி குடும்பத்துடன் அரசாணைபாளையம் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து நிலத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்
அதேபோல் கூழமந்தல் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரது வீட்டிலும் 2 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோபி, பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக தூசி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story