வாகனங்கள் பறிமுதல்; 4 பேர் கைது
வாகனங்கள் பறிமுதல்; 4 பேர் கைது
சிங்கம்புணரி
சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏரியூர் அருகே உள்ள சேங்கை ஊருணியில் இருந்து கிராவல் மண் கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் எஸ்.எஸ். கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரியூர் அடுத்து டி.மாம்பட்டி அருகே 2 டிராக்டர்களில் கிராவல் மண் கடத்தப்பட்டதை கண்டுபிடித்த போலீசார் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர்களை ஓட்டிவந்த டி.மாம்பட்டியைச் சேர்ந்த அய்யப்பன், எருமைபட்டியை அழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து எஸ்.எஸ். கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செட்டிநாடு போலீஸ் சரகம் காயாம்பட்டி சுடுகாடு அருகே கிராவல் மண் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் செட்டிநாடு போலீசார் அங்கு சென்று மண் அள்ளிய டிப்பர் லாரி மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக திருமயத்தைச் சேர்ந்த சுருளி (வயது 32), ரமேஷ்குமார்(24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story