மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி தற்கொலை முயற்சி + "||" + Husband and wife attempt suicide

கணவன் மனைவி தற்கொலை முயற்சி

கணவன் மனைவி தற்கொலை முயற்சி
கடன் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதால் கணவன் மனைவி தற்கொலைக்கு முயன்றனர்.
சிவகாசி,ஜூலை
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். பெட்டிக் கடை நடத்தி வந்த இவர் தொழிலுக்காக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் வெளியூர் சென்று விட்டார்.
இந்த நிலையில் அவருக்கு கடன் கொடுத்த அதே ஊரை சேர்ந்த சிலர், ராஜகோபாலின் மனைவி விநாயக லட்சுமி, மாமனார் சின்ன மாரியப்பன், மாமியார் சுப்புலட்சுமி ஆகியோரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சின்ன மாரியப்பன், சுப்புலட்சுமி ஆகிய 2 பேரும் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்தனர். பின்னர் அவர்களை உறவினர்கள் மீட்டு திருத்தங்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சானிடைசர் குடித்து சிறுமி தற்கொலை முயற்சி
காதலிக்க வற்புறுத்தியதால் சிறுமி சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
2. கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. காதல் தோல்வியால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
திருச்சியில் காதல் தோல்வியால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
4. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
வீரவநல்லூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
5. மாயமான மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மாயமான மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி