38 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்


38 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள்  பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 22 July 2021 6:50 PM GMT (Updated: 2021-07-23T00:20:21+05:30)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 38 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர்,ஜூலை.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 38 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
சாத்தூர்
சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ராஜேஷ் விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இருக்கன்குடியில் பணியாற்றும் ராமநாதன் எம்.ரெட்டியபட்டி போலீஸ் நிலையத்திற்கும், அப்பையநாயக்கன்பட்டியில் பணியாற்றும் புவனேஸ்வரி விருதுநகர் புறநகர் போலீஸ் நிலையத்திற்கும், வெம்பக்கோட்டையில் பணியாற்றும் ரவிச்சந்திரன் வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், சாத்தூர் தாலுகாவில் பணியாற்றும் சுந்தரராஜ் மாரனேரிக்கும், சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சையது இப்ராகிம் சாத்தூர் தாலுகாவிற்கும், ஆலங்குளத்தில் பணியாற்றும் செண்பகவேலன் மாரேனரிக்கும், வெம்பக்கோட்டையில் பணியாற்றும் சதீஷ்குமார் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்திற்கும், ஏழாயிரம்பண்ணையில் பணியாற்றும் அழகுமலை ஆள் கடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சாத்தூர் டவுனில் பணியாற்றும் சசிகுமார் இருக்கன்குடிக்கும், ஆலங்குளத்தில் பணியாற்றும் தங்கவேல் இருக்கன்குடிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எம்.புதுப்பட்டியில் பணியாற்றும் கார்த்திக் ஆமத்தூருக்கும், மாரேனரியில் பணியாற்றும் வேல்சாமி வெம்பக்கோட்டைக்கும், மாரனேரியில் பணியாற்றும் ஆதிஸ்வரன் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கும், சிவகாசி டவுனில் பணியாற்றும் பாண்டியன் சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், சிவகாசி டவுனில் பணியாற்றும் ராமநாதன் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் 
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் திவ்யா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கும், மல்லியில் பணியாற்றும் பெருமாள்சாமி சேத்தூர் போலீஸ் நிலையத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தமிழ்மணி தளவாய் புரத்திற்கும், கூமாபட்டியில் பணியாற்றும் ராமமூர்த்தி வெம்பக்கோட்டைக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுனில் பணியாற்றும் பாபு ஆலங்குளத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுனில் பணியாற்றும் கருத்தப்பாண்டி சேத்தூர் புறநகர் போலீஸ் நிலையத்திற்கும், வத்திராயிருப்பில் பணியாற்றும் செல்லப்பாண்டி மல்லி போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேத்தூரில் பணியாற்றும் சக்திவேல் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், சேத்தூரில் பணியாற்றும் பழனிக்குமார் மம்சாபுத்திற்கும், சேத்தூர் புறநகர் பிரிவில் பணியாற்றும் முத்துராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், பந்தல்குடியில் பணியாற்றும் முருகேஸ்வரி ஆலங்குளத்திற்கும், அருப்புக்கோட்டை தாலுகாவில் பணியாற்றும் முத்துராஜ் பந்தல்குடிக்கும், காரியாபட்டியில் பணியாற்றும் திருமலைக்குமார் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். பரளச்சி ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் கோம்பிகா அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், பரளச்சியில் பணியாற்றும் சக்திகுமார் சேத்தூர் புறநகர் போலீஸ் நிலையத்திற்கும், எம்.ரெட்டியபட்டியில் பணியாற்றும் முத்திருளப்பன் விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கும், திருச்சுழியில் பணியாற்றும் வீராசாமி விருதுநகர் புறநகர் போலீஸ் நிலையத்திற்கும், ஏ.முக்குளத்தில் பணியாற்றும் சரவணகுமார் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் பிரிவில் பணியாற்றும் ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், சாத்தூர் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் நவநீதகிருஷ்ணன் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்திற்கும், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் சுமதி ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் பணியாற்றும் வகுலாதேவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Next Story