மாவட்ட செய்திகள்

ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அப்புறப்படுத்தபடுமா? + "||" + Tank

ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அப்புறப்படுத்தபடுமா?

ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அப்புறப்படுத்தபடுமா?
கிருஷ்ணராயபுரம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அப்புறப்படுத்தபடுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம்
மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சேங்கல் ஊராட்சிக்குட்பட்ட சின்ன சேங்கல் பகுதி பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்தது. 
பொதுமக்கள் கோரிக்கை 
இதனால் கடந்த 2012-13-ம் ஆண்டு கட்டிடங்கள் மேம்பாட்டு பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.43 ஆயிரம் செலவில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டது. தற்போது தொட்டி அதன் உறுதி தன்மையை இழந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. 
 இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த பழமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு புதிய தொட்டி கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திறந்த நிலையில் குடிநீர் தொட்டி
திறந்த நிலையில் குடிநீர் தொட்டி
2. கரூர் அருகே ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற கோரிக்கை
கரூர் காந்திகிராமம் அருகே உள்ள ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.