தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி நிவாரணம் வழங்க கோரி மனு
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி நிவாரணம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர், ஜூலை.
வெம்பக்கோட்டை தாலுகா, அச்சங்குளம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய நிவாரண உதவி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசின் நிவாரண உதவி வழங்கப்படாத நிலை உள்ளது. மேலும் ஆலை உரிமையாளர் வழங்கிய காசோலைகள் 25 பேருக்கு வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு காயத்தின் தன்மையைப் பொறுத்து ரூ.10 லட்சம் வரையும் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டது.
எனவே பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவின்படி நிவாரணம் வழங்கவும், ஆலை உரிமையாளர் வழங்கிய காசோலைக்கு பணம் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story