ரோப்கார் சோதனை ஓட்டம்-இந்த மாதத்திற்குள் நடத்த கலெக்டர் உத்தரவு
சோளிங்கர் லட்சுமி் நரசிம்ம சாமி கோவிலில் நடைபெறும் ரோப்கார் திட்ட பணிகளை விரைந்து முடித்து இந்தமாத இறுதிக்குள் சோதனை ஓட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சோளிங்கர்
சோளிங்கர் லட்சுமி் நரசிம்ம சாமி கோவிலில் நடைபெறும் ரோப்கார் திட்ட பணிகளை விரைந்து முடித்து இந்தமாத இறுதிக்குள் சோதனை ஓட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள லட்சுமிநரசிம்ம சாமி கோவில் மற்றும் யோக நரசிம்மர் பெரிய மலையில் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக ரோப்கார் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிப்பதாக ஒப்பந்ததாரர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ரோப்கார் திட்டபணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதை கண்டித்தார். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான கார் பார்க்கிங், குடிநீர் வசதி, தங்கும் விடுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வு அறைகள், கழிவறை உள்ளிட்ட பணிகளுக்கான இடங்களை பார்வையிட்டார்.
சோதனை ஓட்டம்
அப்போது பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். இம்மாத இறுதியில் கேபிள் இணைக்கப்பட்டு ரோப்கார் சோதனை ஓட்டத்தை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது சோளிங்கர் தாசில்தார் வெற்றி குமார், மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் யுவராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் சானு, மணிவண்ணன், சோளிங்கர் பேரூராட்சி செயல் அலுவலர் செண்பகராஜன், துப்புரவு ஆய்வாளர் வடிவேல் ஆகியோர் உடனிருந்தனர். அதே நேரத்தில் கோவில் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
Related Tags :
Next Story