செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 July 2021 7:09 PM GMT (Updated: 2021-07-23T00:39:26+05:30)

செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தரகம்பட்டி
தரகம்பட்டி அருகே உள்ள முள்ளிப்பாடி ஏரியில் டிப்பர் லாரிகளில் இரவு நேரங்களில் செம்மண் வெட்டி கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன்பேரில் பாலவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரிகளில் பாலவிடுதி அருகே செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான செங்கல் சூளைக்கு செம்மண் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிகளை  போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


Next Story