ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு வாலிபரை ஓட, ஓட விரட்டி அரிவாள் வெட்டு


ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு வாலிபரை ஓட, ஓட விரட்டி அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 22 July 2021 7:12 PM GMT (Updated: 2021-07-23T00:42:18+05:30)

ஸ்ரீரங்கத்தில் வாலிபரை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு
வாலிபரை ஓட, ஓட விரட்டி அரிவாள் வெட்டு
ஸ்ரீரங்கம், 
ஸ்ரீரங்கத்தில் வாலிபரை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

வாக்குவாதம்

திருவானைக்காவல் அம்பேத்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனு (வயது 22). இவர் சன்னதி வீதியில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு டிபன் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது பாரதி தெருவை சேர்ந்த ரெங்கன் (24) தனது நண்பருடன் அங்கு வந்துள்ளார். 

அங்கு சந்தனுவிற்கும், ரெங்கனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரெங்கன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சந்தனுவை வெட்டியுள்ளார். உடனே அங்கிருந்து சந்தனு தப்பி ஓடினார். 

ஓட ஓட அரிவாள் வெட்டு

ஆனால் ரெங்கனும், அவரது நண்பர்களும் அவரை விரட்டிச்சென்று ஓட, ஓட வெட்டியுள்ளனர். இதில் சந்தனு படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 
இதுகுறித்து சந்தனு கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  ரெங்கன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். ஓட, ஓட வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story