திருச்சி மாநகரில் அதிரடி: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் 116 பேர் இடமாற்றம்
திருச்சி மாநகரில் அதிரடியாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுகள் 116 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி,
திருச்சி மாநகரில் அதிரடியாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுகள் 116 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதிரடி இடமாற்றம்
திருச்சி மாநகரில் கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம் கோட்டை, உறையூர், செசன்ஸ் கோர்ட்டு, பாலக்கரை, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுகள், போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் அதிரடியாக இடமாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீரங்கம் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி உறையூர் குற்றப்பிரிவுக்கும், ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோட்டை குற்றப்பிரிவுக்கும், அரியமங்கலம் ராஜாராமன் ஸ்ரீரங்கம் போக்குவரத்து பிரிவுக்கும், கண்டோன்மெண்ட் சிராஜூதீன் போக்குவரத்து குற்ற பிரிவுக்கும், கோட்டை குற்றப்பிரிவு மகேஷ் குமார் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவுக்கும், கோட்டை போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் வீரமணி மற்றும் அரியமங்கலம் போக்குவரத்து பிரிவு சீனிவாசன், உறையூர் அய்யப்பன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏட்டுகள் இடமாற்றம்
இதுபோல போலீஸ் ஏட்டுகள், போலீஸ்காரர்கள் ராதிகா, லதா, ஹேமலதா, லலிதா, சரவணன், லட்சுமி, அகிலாண்டேஸ்வரி, மாலதி, வாசுகி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீஸ்காரர்கள் என மொத்தம் 116 பேர் மாற்றப்பட்டனர். ஒரே போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள், விருப்ப மாறுதல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story