மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி கோவில் விழா நடத்தியவர்கள் மீது வழக்கு + "||" + Prosecution of those who conducted the temple ceremony without permission

அனுமதியின்றி கோவில் விழா நடத்தியவர்கள் மீது வழக்கு

அனுமதியின்றி கோவில் விழா நடத்தியவர்கள் மீது வழக்கு
நாங்குநேரி அருகே அனுமதியின்றி கோவில் விழா நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 20-ந் தேதி இரவு நடந்தது. அதில் கொடை விழாவுக்கு உரிய அனுமதி பெறாமல் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் கூடியதாகவும், விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கொடை விழா நடத்தியதாகவும் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு விழாவுக்கு வந்திருந்திருந்த வெளியூரில் இருந்து வந்தவர்கள் கொடை விழாவின் போது ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அனுமதியின்றி கொடை விழா நடத்தியவர்கள் மற்றும் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.