எடியூரப்பாவை மடாதிபதிகள் ஆதரிப்பது சரியல்ல; குமாரசாமி பேட்டி
முதல்-மந்திரியை நீக்கும் விவகாரத்தில் எடியூரப்பாவை மடாதிபதிகள் ஆதரிப்பது சரியல்ல என்று குமாரசாமி கூறினார்.
பெங்களூரு: பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவை ஏற்று முதல்-மந்திரி எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கர்நாடகத்தில் உள்ள பெரும்பாலான மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் எடியூரப்பாவை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எடியூரப்பாவை நீக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மடாதிபதிகள் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை நீக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மடாதிபதிகள் இவ்வாறு நடந்து கொள்வது புதிய அணுகுமுறையாக உள்ளது. இது சரியல்ல. எடியூரப்பாவை நீக்குவது என்பது பா.ஜனதாவின் உட்கட்சி விவகாரம். இதில் நான் அதிகமாக பேச முடியாது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story