2 ஆயிரத்து 21 ருத்ராட்சங்களை முக கவசம் வடிவில் அடுக்கி சிறப்பு வழிபாடு


2 ஆயிரத்து 21 ருத்ராட்சங்களை முக கவசம் வடிவில் அடுக்கி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 22 July 2021 9:54 PM GMT (Updated: 22 July 2021 9:54 PM GMT)

கோவிலில் 2 ஆயிரத்து 21 ருத்ராட்சங்களை முக கவசம் வடிவில் அடுக்கி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் உள்ள சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் என்ற சிவனடியார் அமைப்பினர், கொரோனா தொற்று காலத்தில் உலக மக்களை காப்பாற்ற வேண்டி 2021-ம் ஆண்டை குறிக்கும் வகையில் 2 ஆயிரத்து 21 ருத்ராட்சங்களை முக கவசம் வடிவில் அடுக்கி வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ருத்ராட்சங்களால் அமைக்கப்பட்ட முக கவசம் மாதிரியை காண்பித்து, முக கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பிரசாரம் செய்யப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், கைகளை சோப்பு போட்டு கழுவவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் முக கவசம் அணியாமல் கோவிலுக்கு வந்த சில பக்தர்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Next Story