மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழ் + "||" + Provisional certificate of Plus-2 score

பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழ்

பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழ்
பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தனர்.
பெரம்பலூர்:
தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு, கடந்த 19-ந்தேதி அரசின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிகள் மூலம் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. மாணவ-மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை நேற்று முதல் அரசின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 11 மணி முதல் அரசின் இணையதள முகவரியில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நகர்ப்பகுதியில் வசிக்கும் மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய விவரத்தை பதிவு செய்து பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொண்டு, நகல் எடுத்து கொண்டனர். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு சரியான இணையதள வசதியும், நகல் எடுக்கும் வசதியும் இல்லாததால், அவர்கள் பயின்ற பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மூலம் தங்களது பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் வரை உயர்கல்வி சேருவதற்கு மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.