சென்னையில், 51 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் புதிதாக நியமனம்


சென்னையில், 51 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் புதிதாக நியமனம்
x
தினத்தந்தி 23 July 2021 10:35 AM IST (Updated: 23 July 2021 10:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் புதிதாக 51 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, 

சென்னையில் போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதவி ஏற்ற பிறகு கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் மட்டத்தில் அதிரடி மாற்றங்களை செய்தார். ஒரே நாளில் 214 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் காலியாக உள்ள சில இடங்களை நிரப்பவும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட 32 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பணிநியமனம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 51 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணி அமர்த்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களின் பெயர் விவரம், அவர்கள் பதவி ஏற்கும் போலீஸ் நிலையங்களின் பெயர் விவரம் வருமாறு:-

1.சங்கரநாராயணன்-தண்டையார்பேட்டை. 2. இசக்கி பாண்டியன்-காசிமேடு மீன்பிடி துறைமுகம். 3.இளங்கோவன்-மெரினா. 4.வனிதா-கீழ்பாக்கம். 5.வள்ளி-அயனாவரம். 6.ரமேஷ்-செங்குன்றம். 7.தாம்சன் சேவியர் ஜார்ஜ்-விருகம்பாக்கம். 8.சிவகுமார்-மடிப்பாக்கம்.

9.ராஜகுமார்-வடக்கு கடற்கரை. 10.சங்கர்-மாதவரம் பால்பண்ணை. 11.கிருஷ்ணமூர்த்தி-ஓட்டேரி. 12.பிரேம்ஆனந்த்-ராயப்பேட்டை. 13.ராதாகிருஷ்ணன்-திருநின்றவூர். 14.சிதம்பரபாரதி-புதுவண்ணாரப்பேட்டை, 15.வளர்மதி-ஆதம்பாக்கம். விபசார தடுப்பு பிரிவு (2) இன்ஸ்பெக்டராக வெங்கட்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story