‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: வெண்ணாற்றின் குறுக்கே பொதக்குடி-அதங்குடி இணைப்பு பாலம் கட்டப்பட்டது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வெண்ணாற்றின் குறுக்கே பொதக்குடி-அதங்குடி இணைப்பு பாலம் கட்டப்பட்டது.
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடிக்கும், அதங்குடிக்கும் இடையே 40 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணாற்றின் குறுக்கே குறுகலான பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தை பொதக்குடி, அதங்குடி, ஆய்குடி, விழல்கோட்டகம், வெள்ளக்குடி, கற்கோவில், சித்தாம்பூர், வாழச்சேரி, கிளியனூர், தேவங்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். கிராமப்புற பள்ளி மாணவர்கள் கூத்தாநல்லூர், பொதக்குடி, கொரடாச்சேரி மற்றும் அருகாமையில் உள்ள ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு இந்த பாலத்தை கடந்து தான் சென்று வந்தனர்.
இந்த நிலையில் அந்த குறுகலான பாலம் நாளடைவில் சேதம் அடைந்தது. தடுப்புச்சுவர் இடிந்தும், பாலத்தின் முகப்பு பகுதிகள் விரிசல்கள் ஏற்பட்டும் காணப்பட்டது.
பாலத்தின் நடுவில் அமைக்கப்பட்ட தளங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சேதம் அடைந்து ஆற்றுக்குள் விழுந்த வண்ணம் இருந்தன. ஆபத்தான நிலையில் இருந்த அந்த பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில், மிகவும் அகலமான புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக பொதக்குடி-அதங்குடி இணைப்பு பாலம் தற்போது கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story