தூத்துக்குடி அருகே புகையிலை விற்ற கடைக்காரர் கைது


தூத்துக்குடி அருகே புகையிலை விற்ற கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 23 July 2021 2:50 PM GMT (Updated: 2021-07-23T20:20:56+05:30)

தூத்துக்குடி அருகே புகையிலை விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்

ஸ்பிக் நகர்:
தூத்துக்குடிஅருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் நேற்று சூசை நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் நின்றிருந்த ஒருவர் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை வைத்திருப்பதை கண்டு அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அந்த பகுதியில் உள்ள பலசரக்கு கடையில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கியது தெரியவந்தது. இது தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பலசரக்கு கடை வைத்திருக்கும் ராமச்சந்திரபாண்டியை கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story