கொற்கை அகழாய்வில் 10 அடுக்கு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு


கொற்கை அகழாய்வில்  10 அடுக்கு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 23 July 2021 8:26 PM IST (Updated: 23 July 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

கொற்கை அகழாய்வில் 10 அடுக்கு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஏரல்:
கொற்கை அகழாய்வில் 10 அடுக்கு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அகழாய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழக அரசு தொல்லியல்துறை சார்பில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை இயக்குனர் தங்கதுரை தலைமையில் ஆய்வாளர்கள் ஆசைத்தம்பி, காளீஸ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 17 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 
இந்த பணிகள் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே சங்க இலக்கியத்தில் கூறப்படும் 2000 ஆண்டுகள் பழமையான ஏழு அடுக்கு கொண்ட செங்கல் கட்டுமான அமைப்புகளும், இதன் அருகே உள்ள மற்றொரு குழியில் நான்கு அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்கள் வடிகட்டும் பெரிய சுடுமண் குழாய்கள் மற்றும் சங்கு அறுக்கும் தொழிற்சாலை இருந்திருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
செங்கல் கட்டுமானம்
இந்த நிலையில் இதுவரை 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நேற்று 10 அடுக்கு கொண்ட செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த இடத்தில் மிகப் பிரம்மாண்டமான கட்டிடம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் ஆய்வு நடந்து வருகிறது.

Next Story