கார் கவிழ்ந்து சிறுவன் பலி
கார் கவிழ்ந்து விபத்து; சிறுவன் பலி
சாயல்குடி
தூத்துக்குடி தபால் தந்தி நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மகன் புவனேஸ்வரன்(வயது 16). முத்துசாமி மற்றும் உறவினர்கள் திருவாரூர் கிராமத்திலுள்ள கோவிலுக்கு செல்வதற்காக நேற்று தூத்துக்குடியிலிருந்து காரில் புறப்பட்டு சென்றனர். இவர்கள் வந்த கார் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சாத்தங்குடி விலக்கு ரோடு அருகே வந்தபோது குறுக்கே மாடு வந்துள்ளது. இதனால் டிரைவர் கணேசன் பிரேக் பிடித்துள்ளார். அதில் நிலைதடுமாறிய கார் அருகில் உள்ள வயல்காட்டில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்து சிறுவன் புவனேஸ்வரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். மேலும் காரில் இருந்த அன்னசெல்வி, சிவரஞ்சனி, கார்த்திகா, டிரைவர் கணேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்தும் அங்கு வந்த கடலாடி போலீசார் காயம் பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புவனேஸ்வரன் உடலை கைப்பற்றி கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story