ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2021 9:54 PM IST (Updated: 23 July 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்
பாதுகாப்பு துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் அரண்மனை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வின்சென்ட் அமலதாஸ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராஜன் ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார். சங்க நிர்வாகிகள் பிச்சை, சண்முகவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் காஞ்சி, ராஜா, செல்வக்குமார், கண்ணன், சண்முகராஜ், லோகநாதன், செல்வராஜ், குமரகுருபரன், அய்யாத்துரை, குருவேல், சந்தானம் உள்பட பலர் பேசினர். மத்திய அரசு பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலை கண்டித்தும், வேளான் சட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும், பாதுகாப்பு துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். முடிவில், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

Next Story