காவேரிப்பாக்கத்தில் அம்மன் சிலையில் இருந்த புடவையை எரித்த மர்ம நபர்கள்


காவேரிப்பாக்கத்தில் அம்மன் சிலையில் இருந்த புடவையை எரித்த மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 23 July 2021 4:29 PM GMT (Updated: 2021-07-23T21:59:30+05:30)

அம்மன் சிலையில் இருந்த புடவையை எரித்த மர்ம நபர்கள்

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கத்தில் உள்ள பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அம்மன் சிலையில் இருந்த புடவையை எரித்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கைக எடுக்க கோரி இந்து முன்னணியினர் வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அந்த மனுவில் காவேரிப்பாக்கத்தில் உள்ள 1,500ஆண்டு பழமைவாய்ந்த பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவில் சுற்றுச் சுவர் ஏறிகுதித்து அம்மன் கோவில் பூட்டை உடைத்து காமாட்சி அம்மன், துர்க்கை அம்மன் சிலைகள் மீது உள்ள புடவையை எடுத்து எரித்துள்ளனர். 
இதே போன்ற சம்பவம் கடந்த மாதம் 20-ந் தேதியும் நடந்தது. இச்சம்பவம் குறித்து காவேரிபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

Next Story