கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகளில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை
கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகளில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கூடலூர்
கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகளில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. .
சாலையில் விழுந்த மரங்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலையில் மரங்கள் விழுந்து வருகின்றன. இந்த நிலையில் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் இரும்பு பாலம், கீழ் நாடுகாணி உள்பட பல இடங்களில் கடந்த வாரம் மரங்கள் சரிந்து விழுந்தன.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலைகளில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது.
ஆனால் பல துண்டுகளாக அறுத்த மரங்கள் சாலைகளில் கிடக்கிறது. அவை இதுவரை அகற்றப்படாமல் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
விபத்து ஏற்படும் அபாயம்
இந்த சாலையில் சரக்கு வாகனங்கள் அதிகம் செல்லும். இரவு நேரத்தில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக முயலும்போது மரத்துண்டுகள் மீது லாரிகள் உரசி செல்கிறது.
இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மழை ஒருபுறம், விழுந்த மரங்களை சரியாக அகற்றாதது மறுபுறம் என்று சாலையில் பயத்துடனே செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சாலை ஓரத்தில் அகற்றப்படாமல் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story