பாணாவரம் அருகே ஓடையில் பதுக்கிவைத்திருந்த 42 யூனிட் மணல் ஏலம்


பாணாவரம் அருகே  ஓடையில் பதுக்கிவைத்திருந்த 42 யூனிட் மணல் ஏலம்
x
தினத்தந்தி 23 July 2021 10:13 PM IST (Updated: 23 July 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

ஓடையில் பதுக்கிவைத்திருந்த 42 யூனிட் மணல் ஏலம்

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா கரிக்கல் மதுரா நரசிங்கபுரம் கிராம ஓடையில் மணல் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய்த் துறையினர் அந்தப்பகுதித்து சென்று சோதனையில் ஈடுபட்டபோது ஓடையில் 42 யூனிட் மணல் பதுக்கிவைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

அந்த மணலை ஏலமிடுவதற்கு பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சோளிங்கர் பொதுப்பணித்துறையினர் மூலம் நேற்று மணல் ஏலம் விடப்பட்டது. ஒரு யூனிட் மணல் ரூ.2,993 வீதம் மொத்தம் 42 யூனிட் மணல் ரூ.1 லட்சத்து 25ஆயிரத்து 706-க்கு ஏலமிடப்பட்டது.

Next Story