பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க கோரி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க கோரி  தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2021 10:14 PM IST (Updated: 23 July 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க கோரி தர்மபுரியில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க கோரி தர்மபுரியில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்க கூட்டமைப்பின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி, தொ.மு.ச. மாவட்ட நிர்வாகிகள் சின்னசாமி, சேகர், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் மோகன், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன், கூட்டமைப்பு நிர்வாகி அர்ஜுனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாக்க வேண்டும்
அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்ப பெறவேண்டும். பாதுகாப்பு துறைக்கான கருவிகள் உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை திருத்துவதை கைவிடவேண்டும். ரெயில்வே, மின்சாரம், சுரங்கங்கள் உள்ளிட்ட துறைகளை தனியார் மயமாக்க கூடாது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீடு நிதி நிறுவனங்களை தனியாருக்கு விற்ககூடாது. பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story