வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 23 July 2021 10:20 PM IST (Updated: 23 July 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

7,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகில் உள்ள சாவல்பூண்டி கிராமத்தில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்- இன்ஸ்பெக்டர் மணி, ஏட்டு கலையரசி மற்றும் போலீசார் சாவல்பூண்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். 

ப்போது அங்குள்ள கொல்லைமேடு பகுதியில் பராமரிப்பின்றி கிடந்த வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் சுமார் 30 கிலோவில் இருந்து 50 கிலோ எடை கொண்ட 195 ரேஷன் அரிசி மூட்டை இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த எடை 7500 கிலோவாகும்.

 இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது வள்ளிவாகை பகுதியை சேர்ந்த குமார் என்பதும், அரிசியை பதுக்கி வைப்பதற்காக வீட்டை வாடகைக்கு விட்டது திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 41) என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த ரேஷன் அரிசி வெளிமாநிலத்தில் விற்பதற்காக உள்ளூர் மக்களிடம் இருந்து வாங்கி பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசிைய பறிமுதல் செய்து பதுக்கலுக்கு உடந்தையாக வீடு வாடகைக்கு விட்ட செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கிய குமாரை தேடி வருகின்றனர்.

Next Story