வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலூர்,ஜூலை
மேலூர் பிஸ்மில்லா நகரில் வசிப்பவர் ஆமீனா பீவி (வயது 60). இவரும், இவரது மருமகள் பயாஸ் பானுவும் (30) வீட்டில் இருந்தனர்.
அப்போது பேண்ட், சட்டை அணிந்த 33 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் ஒருவன் வீட்டுக்குள் புகுந்து ஆமினா பீவியிடம் பட்டா கத்தியை காட்டி நகை கேட்டு மிரட்டினான்.
ஆனால் அவர் நகையை கொடுக்காமல் அந்த திருடனுடன் போராடினார். இதில் ஆமீனா பீவியின் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கூச்சலிடவே அந்த திருடன் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து சக கூட்டாளியுடன் மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்று விட்டான். ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் அந்த திருடன் நகை பறிக்க முயலும் காட்சி பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளின் அடிப்படையில் திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story