மீனவர்கள் பிரச்சினையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்
மீன் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர்,
கடலூரில் மீனவர்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அவர்களுக்கான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் விரைவில் நடக்க இருக்கிறது.
இதையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீன் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமை தாங்கினார்.
இதில் மீன் வியாபாரிகள், சங்க நிர்வாகிகள் கஜேந்திரன், வள்ளுவன், சாதிக்பாட்ஷா, விஜயகுமார், கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இணைந்து செயல்பட வேண்டும்
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பேசுகையில், வரலாற்று ரீதியாக கடலூர் மீனவர்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மீன் வியாபாரிகள் சங்கம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். மீன் வியாபாரிகள் தினந்தோறும் தொழில் பிரச்சினைகளை கையாளுவதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். இரு கிராம மீனவர்களிடையே இருக்கும் பிரச்சினைகளை நன்கு அறிந்து, ஒரு கட்டமைப்பாக இருந்து நடுநிலையாக இருந்து அமைதியை நிலை நாட்ட வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story