கயிறு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து


கயிறு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 23 July 2021 10:35 PM IST (Updated: 23 July 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் கயிறு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கடலூர் முதுநகர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அக்கிள் நாயுடு தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 39). இவர், கடலூர் முதுநகர் கொடிக்கால் குப்பத்தில் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கயிறு தயாரிக்கும் இடத்தில் வைத்திருந்த தேங்காய் நார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் கடலூர் சிப்காட் தீயணைப்பு நிலைய அதிகாரி வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story